காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ‘ஏ’ பிளஸ் ரவுடி தினேஷை காங்கிரஸ் கட்சியின் ஆர்.டி.ஐ. பிரிவு மாநில துணைத் தலைவராக நியமித்திருப்பது அரசியல் வட்டாரங்களில் கடும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரத்தைச் சேர்ந்த தினேஷ் மீது கொலை, கொலை முயற்சி, ஆள் கடத்தல் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது.
போலீஸ் பதிவில் ‘ஏ’ பிளஸ் ரவுடியாக வகைப்படுத்தப்பட்டுள்ள தினேஷ், தற்போது காங்கிரஸ் கட்சியின் ஆர்.டி.ஐ. பிரிவு மாநில துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நியமனத்திற்காக நன்றி தெரிவித்து காஞ்சிபுரம் முழுவதும் அவர் ஒட்டியுள்ள போஸ்டர்கள் புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளன. குற்றப் பின்னணி கொண்ட ஒருவருக்கு கட்சிப் பொறுப்பு வழங்கப்பட்டதற்கான காரணம் குறித்து காங்கிரஸ் தரப்பில் இதுவரை அதிகாரப்பூர்வ விளக்கம் வெளியாகவில்லை.
இதனால், இந்த நியமனம் கட்சியின் பிம்பத்தை பாதிக்கும் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.