தலைநகர் டெல்லி, பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான், உத்தரபிரதேசம் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இன்று அதிகாலை முதல் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. சாலைகளில் மக்கள் நடமாட்டம் கூட தெரியாத அளவுக்கு மூடுபனி அதிகமாக இருந்தது.
டெல்லியில் குறைந்தபட்ச வெப்பநிலை 9 டிகிரி செல்சியஸாக பதிவாகியுள்ளது. கடுமையான குளிர் காரணமாக மக்கள் வீட்டிற்குள்ளேயே சிக்கித் தவித்தனர். 41 எக்ஸ்பிரஸ் ரயில்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
லக்னோ மெயில், பத்மாவதி எக்ஸ்பிரஸ், வைஷாலி எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட 41 ரயில்கள் தாமதமாக இயக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனால் பயணிகள் மிகுந்த அவதிக்குள்ளாகியுள்ளனர்.
எனவே, ரயில்கள் புறப்படும் நேரத்தை அறிந்து பயணிகள் தங்கள் பயணங்களைத் திட்டமிட வேண்டும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.