விக்ரம் நடிப்பில் கவுதம் மேனன் இயக்கிய ‘துருவ நட்சத்திரம்’ படம் பல்வேறு பிரச்சனைகளால் இன்னும் வெளியாகவில்லை. அதை வெளியிட பலமுறை முயற்சி செய்தும் அது நடக்கவில்லை. தற்போது கவுதம் மேனன் இயக்கத்தில் மம்முட்டி நடித்துள்ள ‘டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ்’ படம் ஜனவரி 23-ம் தேதி ரிலீஸாக உள்ளது. அதை விளம்பரப்படுத்தும் விதமாக கவுதம் மேனன் பேட்டி அளித்துள்ளார்.
அதில், ‘துருவ நட்சத்திரம்’ படத்தில் சூர்யா நடிக்காதது குறித்து பேசியுள்ளார். கௌதம் மேனன் கூறுகையில், “துருவ நட்சத்திரம்’ படத்தில் நடிக்கும் சூர்யாவை நினைத்துக்கூட பார்க்கக்கூடாது என்று நினைத்தேன். ‘காக்க காக்க’, ‘வாரணம் ஆயிரம்’ படங்களை அப்படிதான் பண்ணோம். படத்தின் ஐடியா, கதை அனைத்தும் தயாராகிவிட்டன. ‘வாரணம் ஆயிரம்’ படத்தில் அப்பா வேடத்துக்கு நானா படேகர், மோகன்லாலிடம் பேசினேன்.
சில காரணங்களால் அது நடக்கவில்லை. உடனே நானே அப்பா வேடத்தில்தான் நடிப்பேன் என்று சூர்யா கூறினார். அதேபோல் ‘துருவ நட்சத்திரம்’ படத்துக்கும் அவர் ஒப்புக்கொள்ளவில்லை. அதன் கதையைக் கேட்டதும் பல விவாதங்கள் நடந்தன. இந்தக் கதைக்கான குறிப்புகள் என்ன என்று கேட்டுக்கொண்டே இருந்தார். நோட்ஸ் இல்லைன்னு சொன்னேன், நீங்க வந்தால் ஒண்ணு செய்வேன். ஆனால், அவர் என்னை நம்பவில்லை. இதற்கு முன் எங்களுடன் இரண்டு படங்கள் வெற்றி பெற்றதாக அவர் நினைக்கவில்லை என்பது என் எண்ணம்.
என்னை நம்பி வாங்க என்று அவரை சமாதானப்படுத்த நான் மிகவும் முயற்சித்தேன். ஆனால் அது நடக்கவில்லை. வேறு யாரேனும் வேண்டாம் என்று சொன்னாலும் நான் எதையும் யோசித்திருக்க மாட்டேன். ஆனால் சூர்யா வேண்டாம் என்று கூறியதால் நான் மிகவும் வருத்தப்பட்டேன்” என்றார் கவுதம் மேனன். இந்த வீடியோ பதிவு இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.