தஞ்சாவூர்: தஞ்சையில் மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை நடக்கிறது.
இது குறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி கழக தஞ்சை நகரிய செயற்பொயாளர் மணிவண்ணன் கூறியதாவது:
தஞ்சை நகர் பொதுமக்களின் நலன் கருதி மின்நுகர்வோ குறைதீர்க்கும் கூட்டம் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை தஞ்சை மேற்பார்வை பொறியாளர் நளினி தலைமையில் கோர்ட்டு ரோட்டி உள்ள நகரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடக்கிறது. எனவே தஞ்சை நகர கோட்டத்திற்கு உட்பட்ட நகர் எஎல்லையான தெற்கு வீதி, வடக்கு வீதி, மேலவீதி, கரந்தை, பள்ளியக்ரஹாரம், கீழவாசல், தொல்காப்பியர் சதுக்கம், மேரீஸ் கார்னர், அருளானந்த நகர், பர்மா காலனி, நிர்மலா நகர், யாகப்பா நகர், அருளானந்தம்மாள் நகர், பழைய வீட்டுவசதி வாரியம், காந்திஜி ரோடு, மருத்துவக்கல்லூரி சாலை, நீலகிரி, மானோஜிப்பட்டி, ரகுமான் நகர், ரெட்டிப்பாளையம் சாலை சிங்கபெருமாள் குளம், ஜெபமாலைபுரம், வித்யா நகர், மேலவெளி பஞ்சாயத்து, தமிழ் பல்கலைக்கழக வளாககுடியிருப்பு, மாதாக்கோட்டை சாலை, புதிய பஸ் நிலையம், திருவேங்கட நகர், இனாத்துக்கான்பட்டி, நட்சத்திரா நகர், நாஞ்சிகோட்டை ஆகிய பகுதிகளை சேர்ந்த மின்நுகர்வோர் மற்றும் பொதுமக்கள் தங்களுக்கு ஏதேனும் குறை இருப்பின் நேரில் வந்து மனு அளிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.