புதுச்சேரி: கட்டாமணி குப்பம் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் குடிநீர் விநியோகத்தை பிரகாஷ்குமார் எம்எல்ஏ துவக்கி வைத்தார். காட்டாமணிக்குப்பம் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து வினியோகிக்கப்படும் குடிநீர் அதிக உப்புத்தன்மை கொண்டது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் எம்எல்ஏ பிரகாஷ்குமாரிடம் முறையிட்டனர். பொதுப்பணித்துறை அதிகாரிகளை அழைத்து, சுத்தமான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இதையடுத்து, புதிய ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டது.
காட்டாமணி குப்பம் மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் இருந்து சுகாதாரமான குடிநீர் வினியோகம் நேற்று துவங்கியது. இந்நிகழ்ச்சியில் பிரகாஷ்குமார் எம்எல்ஏ கலந்து கொண்டு புதிய குடிநீர் இணைப்பை தொடங்கி வைத்தார். பொதுப்பணித்துறை இளநிலை பொறியாளர்கள் சங்கர், ஞானவேல், பொதுப்பணித்துறை ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் பங்கேற்றனர்.