சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் பெ.சண்முகம் விடுத்துள்ள அறிக்கையில், “காவிரி டெல்டா மாவட்டங்களில் பருவம் தவறிய கனமழையால் அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கி அழுகியுள்ளன. குறிப்பாக, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர் மாவட்டங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த 1 லட்சம் ஏக்கர் நெற்பயிர்களும், ஊடுபயிராக பயிரிடப்பட்டிருந்த உளுந்து, தினை பயிர்களும் தண்ணீர் தேங்கி சேதமடைந்துள்ளன.
இதனால் விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரம் முழுவதையும் இழந்து பரிதவிக்கும் நிலையில் உள்ளனர். எனவே, தமிழக அரசு மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை உடனடியாக பார்வையிட்டு மதிப்பீடு செய்து, இழப்பீடாக பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.35 ஆயிரமும், மற்ற பயிர்களுக்கு அதன் பாதிப்புகளுக்கு ஏற்றவாறு மேலும், ஈரப்பதம் 17 சதவீதம் இருக்கும்போது நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் பறிக்கும் முறையை மாற்றி 22 சதவீதமாக உயர்த்தி நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் தமிழக அரசை வலியுறுத்துகிறது.