சென்னை: பசுவின் சாணத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மருத்துவ குணங்கள் இருப்பதாக சென்னை ஐஐடி இயக்குனர் காமகோடி கூறியதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். மாட்டுப் பொங்கலையொட்டி சென்னையில் நடைபெற்ற விழாவில் பேசிய சென்னை ஐஐடி இயக்குநர் வி.காமகோடி, “மாட்டுச் சாணத்தில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் மருத்துவக் குணங்கள் உள்ளன” என்று கூறியிருந்தார்.
இதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில், ”மாட்டுச் சாணம் சாப்பிடுவதற்கு ஏற்றதல்ல என அறிவியல் ரீதியாக நம்பும் போது, அதற்கு எதிராக அறிவியல் நிறுவன இயக்குனர் பேசியதை யாரும் ஏற்க முடியாது. அவர் இந்த பதவியில் நீடிப்பது அங்கு படிக்கும் மாணவர்களின் எதிர்காலத்திற்கு நல்லதல்ல. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் பி.சண்முகம் பேசுகையில், ‘ஐஐடி இயக்குனரின் கோமியம் பற்றிய பேச்சு மக்களிடையே அறிவியலற்ற பார்வையை வளர்க்கவே உதவும்.
இந்திய கால்நடை மருத்துவ நிறுவனத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கோமியம் உடல் நலத்திற்கு கேடு விளைவிப்பதாக கூறியுள்ளனர். எனவே, இயக்குனர் பதவியில் இருந்து காமகோடியை உடனடியாக நீக்க வேண்டும். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் இல.முத்தரசன், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாணவர் அணி மாநிலச் செயலர் ராகேஷ் ராஜசேகரன் உள்ளிட்டோர் கோமியம் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.
சென்னை ஐஐடி இயக்குனர் வி.காமகோடி சென்னையில் நேற்று நிருபர்களிடம் கூறுகையில், ”கோமியத்தில் நோய் எதிர்ப்பு தன்மை உள்ளது. இதற்கான அறிவியல் ஆதாரம் என்னிடம் உள்ளது. ஆய்வுக் கட்டுரைகளில் இது தொடர்பான தகவல்கள் உள்ளன. அத்தகைய ஆராய்ச்சிக்கான காப்புரிமையும் பெறப்பட்டுள்ளது. நேச்சர் மற்றும் அமெரிக்காவின் என்ஐஎச் ஆய்வுக் கட்டுரைகள் சீரகத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தன்மைகள் அதிகம் என்று தெளிவாகக் கூறுகின்றன.
தற்போது சீரகத்தின் மீது அதிக ஆர்வம் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இதை நான் நேர்மறையாகவே பார்க்கிறேன். தற்போது இயற்கை மருத்துவம் மிகவும் பிரபலமாகி வருகிறது. ஐஐடியில் மருத்துவ தொழில்நுட்பத் துறை இயங்கி வருகிறது. எந்தப் பேராசிரியரும் சீரகம் குறித்து ஆராய்ச்சி செய்ய விரும்பினால், அதை சுதந்திரமாகச் செய்யலாம்,” என்றார்.