சென்னை : மதுரை டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கான ஏலத்தை மத்திய அரசு ரத்து செய்துள்ளதை வரவேற்கிறேன் என்று எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
தங்கள் உரிமைகளுக்காக, தொடர்ந்து போராடி வென்ற மதுரை, மேலூர் மக்களுக்கு எனது வாழ்த்துகள். மக்களின் போராட்டத்தை உணர்ந்த மத்திய அரசு டங்ஸ்டன்
சுரங்கத்தை ரத்து செய்ததன் மூலம் மக்கள் சக்தி வெற்றி பெற்றுள்ளது.
டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தில் இரட்டை வேட நாடகமாடி மக்களை ஏமாற்ற முயற்சித்த திமுக அரசின் செயலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. இவர் அவர் தெரிவித்துள்ளார்.