வாஷிங்டன் : கடந்த 2020ம் ஆண்டு தேர்தலில் ட்ரம்ப் வெற்றி பெற்றிருந்தால், ரஷ்யா – உக்ரைன் இடையே போர் ஏற்பட்டு இருக்காது என்று ரஷ்ய அதிபர் புதின் அறிவித்துள்ளார்.
2020ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு ட்ரம்ப் வெற்றி பெற்று இருந்தால் ரஷ்யா – உக்ரைன் இடையே போர் ஏற்பட்டு இருக்காது என்று ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார். ரஷ்யாவிற்கும் உக்ரைனிற்கும் 2 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வரும் போரில் இரு தரப்பிலும் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.
போரை முடிவுக்கு கொண்டு வர, சர்வதேச அளவில் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. இந்த நிலையில், அமெரிக்க அதிபராக பதவியேற்ற ட்ரம்ப், அமெரிக்காவில் வலுவான அதிபர் பதவியில் இருந்திருந்தால் ரஷ்யா – உக்ரைன் இடையே போர் ஏற்பட்டு இருக்காது என்று தெரிவித்தார்.
தனது ஆட்சி காலத்தில், உக்ரைன் மீது தாக்குதல் நடத்த ரஷ்யா தயங்கும் என்ற அவர், ரஷ்ய அதிபர் புதின் அமைதி பேச்சுவார்த்தைக்கு முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.