புனே: மகாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டத்தின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக குய்லின்-பார் சிண்ட்ரோம் (ஜிபிஎஸ்) என்ற நரம்பியல் கோளாறு பரவி வருகிறது. இந்த நோய் மனிதனின் நோயெதிர்ப்பு அமைப்பு, மூளைக்கு வெளியே உள்ள நரம்புகள் மற்றும் முதுகுத் தண்டு ஆகியவற்றைத் தாக்குகிறது.
புனேவில் இதுவரை 101 பேர் இந்த மர்ம நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் நேற்று புனேயில் இந்நோய்க்கு சிகிச்சை பெற்று வந்த ஒருவர் உயிரிழந்தார். இதன் மூலம், ஜிபிஎஸ் காரணமாக முதல் மரணம் பதிவாகியுள்ளது.

கிர்கித்வாடி, டி.எஸ்.கே விஷ்வா, நான்டெட் ஆகிய பகுதிகளில் இருந்து அதிக அளவில் நோயாளிகள் இருப்பது தெரியவந்துள்ளது. இந்த நோய்க்கு இதுவரை தடுப்பூசி இல்லை என தெரியவந்துள்ளது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள். அறிகுறிகள் தென்பட்டவுடன் நரம்பியல் நிபுணரை அணுகி சிகிச்சை பெறலாம். அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவர்களை அணுகுமாறு மகாராஷ்டிர மாநில சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.