வாஷிங்டன்: அமெரிக்காவில் 7,000-க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் சட்டவிரோதமாக தங்கியுள்ளனர். குடியேற்ற கல்விக்கான அமெரிக்க மையத்தைச் சேர்ந்த ஜெசிகா எம்.வேகன் கூறியதாவது:- அமெரிக்க பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களில் படிக்க வெளிநாட்டு மாணவர்களுக்கு எப்1 விசா வழங்கப்படுகிறது.
அதேபோல் கல்வி சுற்றுலாவுக்கு வரும் வெளிநாட்டு மாணவர்களுக்கு எம்1 விசா வழங்கப்படுகிறது. இந்தியா, சீனா, பிரேசில், கொலம்பியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த எஃப்1 மற்றும் எம்1 விசாக்களில் அமெரிக்காவுக்கு வரும் மாணவர்கள், விசா காலம் முடிந்த பிறகும் சட்டவிரோதமாகத் தங்குவது தொடர்கிறது.
இவர்களில் பெரும்பாலோர் இந்திய மாணவர்கள், அவர்களில் 7,000 பேர் அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியுள்ளனர். H1B விசாவில் அமெரிக்காவில் பணிபுரியும் வெளிநாட்டவர்களும் தங்கள் விசாக் காலத்தை விட அதிகமாக தங்கியுள்ளனர். இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜெசிகா எம் வேகன் தெரிவித்துள்ளார்.