உக்ரைன் : உக்ரைன் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்தியதில் 6 பேர் பலியாகி உள்ளனர் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய டிரோன் மற்றும் ஏவுகணை தாக்குதலில் 6 பேர் பலியானார்கள். உக்ரேனிய நகரமான பொல்டாவாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் மீது ரஷ்ய ஏவுகணை தாக்குதல் நடத்தியது.
இந்த சம்பவத்தில் 6 பேர் பலியானார்கள். மேலும் மூன்று குழந்தைகள் உட்பட 13 பேர் காயமடைந்தனர் என்று அந்நாட்டின் அவசர சேவைகள் இன்று தெரிவித்தன.
ரஷ்யா-உக்ரைன் இடையேயான போர் 3 ஆண்டுகளாக தொடர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்த போரில் இரு தரப்பிலும் ஏராளமானோர் பலியாகி உள்ளனர்.