புதுடெல்லி: வக்ஃபு வாரிய திருத்த மசோதா நாளை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது என தெரியவந்துள்ளது.
நாடு முழுவதும் விமர்சனத்தை ஏற்படுத்திய வக்ஃபு வாரிய திருத்த மசோதாவின் நாடாளுமன்ற கூட்டுக் குழு அறிக்கை நாளை (3ம் தேதி) தாக்கல் செய்யப்பட உள்ளது.
குழுவின் தலைவர் ஜகதாம்பிகா பால், நாடாளுமன்றத்தில் இதை தாக்கல் செய்ய உள்ளார்.
முன்னதாக, நாடாளுமன்றத்தில் கூட்டுக்குழு வாக்கெடுப்பின் மூலம் இம்மசோதா ஏற்கப்பட்டதை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடுமையாக எதிர்த்தது குறிப்பிடத்தக்கது.