ஒடிசா: ஹாக்கி இந்தியா லீக் போட்டியில் அபாரமாக விளையாடி பெங்கால் டைகர்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
6வது ஹாக்கி இந்தியா லீக் போட்டி, ஒடிசாவின் ரூர்கேலாவில் நடைபெற்றது. இதில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் ஐதராபாத் டூபான்ஸ் -ஷராச்சி ரார் பெங்கால் டைகர்ஸ் மோதின.
விறுவிறுப்பாக நடத்த ஆட்டத்தின் முடிவில் பெங்கால் டைகர்ஸ் 4-3 என்ற கோல் கணக்கில் திரில் வெற்றி பெற்று சாம்பியன் கோப்பையை தட்டி சென்றது. பெங்கால் அணி தரப்பில் ஜுக்ராஜ் சிங் 3 கோல்களும் சாம் லேன் ஒரு கோலும் அடித்தனர்.
இந்தப் போட்டி ரசிகர்களுக்கு மிகவும் விருந்தாக அமைந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. யார் வெற்றி பெறுவார்கள் என்ற பரபரப்பை ஏற்படுத்தி கடைசியில் திரில் வெற்றியை பெங்கால் டைகர்ஸ் அணி பெற்றது.