சென்னை: தங்கம் விலை குறையும் என்றும், வெள்ளி விலை அதிகரிக்கலாம் என்றும் நாடாளுமன்றத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரும்புத் தாது மற்றும் துத்தநாகத்தின் விலை வீழ்ச்சியால் உலோகங்கள் மற்றும் கனிமங்களின் விலை குறையும் என்று பொருளாதார ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. இந்தியாவில் தங்கம் இறக்குமதி அதிகரித்துள்ளது. தற்போதைய பணவீக்க விகிதம் தங்கத்தின் விலையை குறைக்கும்.
தற்போது தங்கத்தின் விலை தற்காலிகமாக அதிகரித்தாலும், வரும் ஆண்டுகளில் தங்கத்தின் விலை குறையும் என 2024-25 பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக, 2026-ல் பொருட்களின் விலை 5.1 சதவீதத்தில் இருந்து 1.7 சதவீதமாக குறையும்.
இது பெரும்பாலான பொருட்களின் விலையை குறைக்கும். தங்கத்தின் விலையும் குறையும் என்று கணிப்பு தெரிவிக்கிறது. சர்வதேச அளவில் வெள்ளியின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. எதிர்காலத்தில் தங்கத்தின் மதிப்புக்கு இணையாக வெள்ளியின் மதிப்பு மாறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. வரும் ஆண்டுகளில் வெள்ளியின் மதிப்பு உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. கடந்த 12 ஆண்டுகளில் வெள்ளி புதிய உச்சத்தை எட்டியுள்ளது.