திருவாரூர்: நடிகர் சிவகார்த்திகேயன் தனது மூன்றாவது குழந்தையின் காதணி விழாவை தனது சொந்த ஊரான திருவீழிமிழலையில் நடத்தி முடித்துள்ளார்.
தமிழ் திரையுலகின் தற்போதைய வசூல் நாயகனாக விளங்கும் சிவகார்த்திகேயன், ‘மெரினா’ படத்தின் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து, பல வெற்றிப் படங்களைக் கொடுத்து தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத கதாநாயகன் என்கிற நிலைக்கு உயர்ந்துள்ளார்.
இவரது நடிப்பில் வெளியான அமரன் படம் வசூலில் சக்கை போடு போட்டது. மேலும், இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வருகிறார். தற்போது சுதா கொங்கரா இயக்கத்தில் ‘பராசக்தி’ படத்தில் நடித்து வருகிறார்.
சிவகார்த்திகேயனுக்கு 1 மகள் மற்றும் 2 மகன்கள் உள்ள நிலையில், அவரது 3வது மகன் பவனின் காதணி விழாவை, தனது சொந்த ஊரான திருவாரூர் மாவட்டம், திருவீழிமிழலையில் வைத்து நடத்தியுள்ளார். அப்போது, அவருடன் கிராம மக்கள் சிலர் ஆர்வத்துடன் புகைப்படம் எடுத்துச் சென்றனர்.