ராஜஸ்தான்: சட்டவிரோத மதமாற்றம் செய்பவர்களுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று ராஜஸ்தான் மாநில அரசு சட்டத்திருத்தம் கொண்டு வந்துள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தை ஆளும் பாஜக அரசு அம்மாநிலத்தில் புதிய சட்டத்திருத்தத்தை கொண்டு வந்துள்ளது. அதன்படி சட்டவிரோத மதமாற்றத்திற்கு 10 ஆண்டு சிறை தண்டனை, சிறுமி, பெண்கள் மற்றும் சிறுபான்மையினர் தொடர்பான விதிகளை மீறினால் 10 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.25,000 அபராதம் விதிக்கப்படும்.
மதத்திற்கு மாற விரும்பினால் 60 நாட்களுக்கு முன் மாவட்ட ஆட்சியரிடம் விண்ணப்பிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.