உத்தரகாண்ட் : உத்தரகாண்டில் முதல் ‘லிவ் இன்’ உறவு முறை பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் சிலர் இதற்காக விண்ணப்பித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
இந்தியாவில் பொது சிவில் சட்டம், திருமணம் செய்யாமல் ஆண் மற்றும் பெண் இணைந்து வாழும் ‘லிவ் இன்’ உறவு முறையை அங்கீகரிக்கிறது. தற்போது உத்தரகாண்ட் மாநிலத்தில் நடைமுறைக்கு வந்துள்ளது.
இந்த சட்டத்தின் அடிப்படையில் முதல் ஜோடி தங்களுடைய ‘லிவ் இன்’உறவு முறையை பதிவு செய்துள்ளது. மேலும் சிலர் அனுமதி கேட்டு விண்ணப்பித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.