சென்னை: ஓய்வூதிய குழுவால் பயனில்லை என்று தலைமைச் செயலக சங்க தலைவர் அறிவித்துள்ளார். மேலும் பழைய ஓய்வூதிய திட்டம் குறித்து என்ன செய்வது என்பது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவது குறித்து ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழ்நாடு தலைமைச் செயலக சங்க தலைவர் கு. வெங்கடேசன், “இந்தக் குழுவால் தற்போது எந்த பலனும் கிடைக்காது. முதல்வர் ஸ்டாலின் மீது நம்பிக்கை போய்விட்டது” என்று குறிப்பிட்டுள்ளார்.
பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்று அரசு ஊழியர்கள் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.