புதுடில்லி: ஏடிஎம்மில் இலவச பண பரிவர்த்தனைக்கு பின்னர் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் ரூ.21 கட்டணம் பெறப்படுகிறது. இதை ரூ. 22ஆக உயர்த்த தேசிய பேமெண்ட் கார்ப்பரேசன் பரிந்துரைத்துள்ளது
வாடிக்கையாளர்கள் தற்போது ஏடிஎம்மில் 5 முறை இலவசமாக பண பரிவர்த்தனை செய்யலாம்.
அதன்பிறகு ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் ரூ.21 கட்டணம் பெறப்படுகிறது. இதை ரூ. 22ஆக உயர்த்த தேசிய பேமெண்ட் கார்ப்பரேசன் பரிந்துரைத்துள்ளது. இந்த பரிந்துரை குறித்து ரிசர்வ் வங்கி ஆலோசனை நடத்தி வருகிறது.
ஒரு வங்கி ஏடிஎம் சேவைகளைப் பயன்படுதத மற்றொரு வங்கிக்கு செலுத்தும் பரிமாற்றக் கட்டணத்தை உயர்த்தவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.