அஜீத் நடித்த ‘விடாமுயற்சி’ படம் உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. பல்வேறு பிரச்சனைகளை கடந்து இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. இதனை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். முதல் காட்சி இந்திய நேரப்படி அதிகாலை 5 மணிக்கு அமெரிக்காவில் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து கர்நாடகா மற்றும் ஆந்திரா மாநிலங்களில் திரையிடப்பட்டது.
தமிழகத்தில் முதல் காட்சி காலை 9 மணிக்கு தொடங்கியது. பிப் 2023-ல் அஜித்தின் ‘துணிவு’ படம் வெளியானது. அதன் பிறகு வெளியாகும் படம் என்பதால் அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். திரையிடல் இரவு 9 மணிக்குதான் என்றாலும், இரவு முதலே தியேட்டர்களில் ஆடியும், பாடியும் ரசித்தும் வருகின்றனர். அதிக அளவில் திரையரங்குகளில் வெளியாகி வருவதால் முதல் நாள் வசூல் அமோகமாக இருக்கும் என வர்த்தக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
![](https://vivegamnews.com/wp-content/uploads/2025/02/4-1-7.png)
லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘விடாமுயற்சி’ திரைப்படம் பல்வேறு பிரச்சனைகளை தாண்டி வெளியாகியுள்ளது. முதலில், லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் அஜித் இணையும் படத்தை விக்னேஷ் சிவன் இயக்க இருந்தார். பின்னர், அவர் நீக்கப்பட்டு மகிழ் திருமேனி பொறுப்பேற்றார். 2023-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இப்படம் 2025-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியானது.
பொங்கலுக்கு வெளியாகும் என கூறப்பட்ட இப்படம் கதை சர்ச்சையில் சிக்கி பின்னர் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்பட்டு தற்போது வெளியாகியுள்ளது. மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித், அர்ஜுன், த்ரிஷா, ரெஜினா, ஆரவ் மற்றும் பலர் நடித்துள்ள படம் ‘விடாமுயற்சி’. அனிருத் இசையமைப்பாளராகவும், ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவாளராகவும், ஸ்ரீகாந்த் படத்தொகுப்பாளராகவும் பணியாற்றியுள்ளனர்.