கோவை: கோவை ரேஸ்கோர்ஸில் மக்கள் சேவை மையம் மற்றும் தனியார் அமைப்பு சார்பில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பேரணி நடந்தது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பாஜக தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்எல்ஏ பங்கேற்றார். பின்னர், வானதி சீனிவாசன் நிருபர்களிடம் கூறியதாவது:-
திருப்பரங்குன்றம் பிரச்னையில் எதிர்கட்சிகள் கோர்ட்டுக்கு சென்று போராட்டம் நடத்த அனுமதி பெறும் நிலையில் உள்ளது. அரசியலமைப்புச் சட்டம் வழங்கிய உரிமையைப் பெற நீதிமன்றத்தை நாட வேண்டும். டெல்லி மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். இந்தத் தேர்தல் முடிவுகளை நாங்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
தமிழக வெற்றிக் கட்சி நிர்வாகிகள் நியமனத்தில் இவ்வளவு குளறுபடி நடந்தால், அடுத்த பரிணாமத்தை ஒரு அரசியல் இயக்கம் அடையுமா? ஒரு அரசியல் இயக்கம் அடுத்த பரிணாமத்தை அடைய முடியுமா என்பதே கேள்வி. இவ்வாறு அவர் கூறினார்.