மேஷ ராசிக்காரர்கள் எதிர்ப்புகளை மீறி முன்னேற்றம் அடைவார்கள். திருமண நிகழ்ச்சிகளுக்காக அதிகம் செலவழிக்க நேரிடும்.
ரிஷப ராசிக்காரர்கள் கணக்கு வழக்குகளில் கவனம் தேவை. புதிய தொழில்களில் போட்டியாளர்கள் மூலம் சிரமம் ஏற்படலாம்.
மிதுன ராசிக்காரர்கள் ஆடம்பரச் செலவுகளை கட்டுப்படுத்துவது நல்லது. போட்டி பந்தயங்களில் அதிக லாபம் கிடைக்க வாய்ப்பு குறைவாக உள்ளது.

கடக ராசிக்காரர்கள் தொழிலில் முன்னேற்றம் பெற்று எதிர்பாராத வருமானம் பெறுவார்கள். குடும்பத்தில் அமைதியை உறுதி செய்ய வேண்டிய நாள்.
சிம்ம ராசிக்காரர்கள் நகை வாங்குவார்கள். பணப்பிரச்சினைகள் தீர்ந்து நிம்மதியை பெறுவார்கள்.
கன்னி ராசிக்காரர்கள் நெருக்கடிகளை சமாளித்து வெற்றி பெறுவார்கள். வெளிப்புற பயணங்கள் லாபகரமாக முடியும்.
துலாம் ராசிக்காரர்கள் பைனான்ஸ் மற்றும் ஆன்லைன் முதலீடுகளில் அவதானமாக இருக்க வேண்டும். இன்று சந்திராஷ்டமம் என்பதால் எச்சரிக்கையாக நடந்துகொள்ளவும்.
விருச்சிக ராசிக்காரர்கள் திருமண பேச்சுவார்த்தைகளை வெற்றிகரமாக முடிக்கலாம். குடும்ப உறவுகள் நல்ல முறையில் அமையும்.
தனுசு ராசிக்காரர்கள் தொழில் போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி பெறுவார்கள். பணச்சுமை காரணமாக சிக்கனமாக செலவழிக்க வேண்டிய நாள்.
மகர ராசிக்காரர்கள் பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து கவலைப்படும் நாள். பணவரவு அதிகரிக்கும்.
கும்ப ராசிக்காரர்கள் விட்டுக்கொடுத்தால் வெற்றி பெற வாய்ப்பு உண்டு. வியாபாரத்தில் ஏற்ற இறக்கங்களை சமாளிக்க வேண்டிய நாள்.
மீனம் ராசிக்காரர்கள் வேலை காரணமாக குடும்பத்திலிருந்து பிரிந்து செல்ல நேரிடும். புதிய வாகனங்களை வாங்கும் யோகம் உண்டு.