By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    அதிபர் டிரம்ப் நிகழ்ச்சியில் துப்பாக்கிச்சூடு நடத்தியவர் பற்றி வெளியான தகவல்
    1 Min Read
    அரசியலுக்கு முழுக்கு போடுகிறேன்… பிரான்ஸ் அதிபர் தகவலால் பரபரப்பு
    1 Min Read
    கைதி நடத்திய துப்பாக்கிச்சூடு… போலீஸ்காரர் பலி
    1 Min Read
    ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்… ரிக்டரில் 6.1 ஆக பதிவு
    1 Min Read
    துப்பாக்கிசூடு நடத்தி கைதான நபர்… அதிபர் டிரம்ப் புகைப்படம் வெளியிட்டார்
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    85 சதவீத எத்தனால் கலந்த பெட்ரோலை அறிமுகப்படுத்த மத்திய அரசு
    1 Min Read
    பிளாஸ்டிக் கிடங்கில் பெரும் தீ விபத்து… மக்கள் அதிர்ச்சி
    2 Min Read
    விராட் கோலியின் ஒன் 8 ஓட்டல் நிதி நெருக்கடியால் மூடல்
    1 Min Read
    பயங்கரவாதத்துக்கும் வன்முறைக்கும் எதிராக நாம் ஒன்றுபட்டு நிற்கிறோம்: உமர் அப்துல்லா உறுதி
    1 Min Read
    அதிக அளவு புரதச்சத்து நிறைந்த வேர்க்கடலையின் நன்மைகள்
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    கடுமையான காய்ச்சலை குணப்படுத்த உதவும் பப்பாளி கசாயம்
    1 Min Read
    முதியவர்களுக்கு உடல் ஆரோக்கியத்தை வலுப்படுத்தும் உடற்பயிற்சிகள்
    1 Min Read
    கடலை மிட்டாய் சாப்பிடுவதால் அதிகரிக்கும் நோய் எதிர்ப்பு சக்தி
    2 Min Read
    ஆரோக்கிய சத்து நிறைந்த சூரியகாந்தி விதை!
    1 Min Read
    கொத்தமல்லி இலையை உணவில் அடிக்கடி சேர்த்துகொள்ளுங்கள்!!
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவிலில் தேரோட்டம் கோலாகலம்
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > ஆன்மீகம் > திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவிலில் தேரோட்டம் கோலாகலம்
ஆன்மீகம்

திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவிலில் தேரோட்டம் கோலாகலம்

Nagaraj
Last updated: April 27, 2026 4:47 pm
By Nagaraj 1 Min Read
Share
SHARE

திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு நகருக்குள் வரும் அரசு பஸ்கள் புற வழிச்சாலை வழியாக திருப்பி விடப்பட்டன.

திருக்கழுக்குன்றத்தில் உள்ள வேதகிரீஸ்வரர் கோவில் மிகவும் சிறப்பு பெற்றது. இந்தகோவிலில் சித்திரை பிரம்மோற்சவ விழா கடந்த 21 -ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழாவை முன்னிட்டு பஞ்சமூர்த்திகளான விநாயகர், வேதகிரீஸ்வரர், திரிபுரசுந்தரி அம்பாள், முருகர், சண்டிகேஸ்வரர் என உற்சவமூர்த்திகள் தினசரி காலை, இரவு நேரங்களில் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். கடந்த 23-ந் தேதி 63 நாயன்மார்கள் கிரிவலம் நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை விமரிசையாக நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட ஐந்து தேர்களில் முதலாவதாக ஸ்ரீ விநாயகர், வேத கிரீஸ்வரர், திரிபுர சுந்தரி அம்மன், முருகர், சண்டிகேஸ்வரர் ஆகியோர் எழுந்தருளினர்.

காலை 6 மணிக்கு, முதலாவதாக விநாயகர் தேரையும் அதனைத் தொடர்ந்து மற்ற தேர்களையும் பக்தர்கள் பெருந்திரளாக கலந்துக் கொண்டு வடம் பிடித்து இழுத்தனர். அப்போது பக்தர்கள் “சிவாய நம…, ஓம் நமச்சிவாய, வேதகிரீஸ்வரா..” என்று பக்தி கோஷங்கள் எழுப்பினர்.

தேரோட்டத்தில் திருக்கழுக்குன்றம், மாமல்லபுரம் மற்றும் செங்கல்பட்டு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். தேர்வரும் வீதிகளான மேட்டுதெரு, கருங்குழி சாலை, பெரிய தெரு, கம்மாளர் தெரு ஆகிய இடங்களில் பக்தர்களுக்கு நீர், மோர், தண்ணீர், பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

தேரோட்டத்தை முன்னிட்டு திருக்கழுக்குன்றம் நகருக்குள் வரும் அரசு பஸ்கள் புற வழிச்சாலை வழியாக திருப்பி விடப்பட்டன. பிற்பகல் ஐந்து தேர்களும் கோவில் முன்பு நிலையை வந்தடைந்தன. ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மின்வாரியத்தினர் தேர்கள் செல்லும் பாதையில் உள்ள மின் வயர்களை பாதுகாப்புக்காக துண்டித்து இருந்தனர். விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் வெங்கடேசன் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

You Might Also Like

திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல உகந்த நேரம் பற்றிய அறிவிப்பு

போராடி பெறுவதுதான் நீதி… எம்.பி. ராகுல் காந்தி வெளியிட்ட பதிவு

85 சதவீத வாக்குப்பதிவு…. தவெக தலைவர் விஜய் பதிவிட்டது என்ன?

27-ம் தேதி தேரோடும் பாதையில் மின்தடை — தஞ்சையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை

திவ்ய தேசங்களில் தனி இடம் பிடிக்கும் வல்வில் ராமர் — அபூர்வ திருக்காட்சி!

TAGGED:devoteeselectric pathOfferingssecurityTherottamaThirukkazhukundramதிருக்கழுக்குன்றம்தேரோட்டம்பக்தர்கள்பாதுகாப்புபிரசாதம்மின்பாதை
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
வர்த்தகம்

திருப்பூரில் புதிய கோட்ட அலுவலகத்தை தொடக்கி கரூர் வைஸ்யா வங்கி

By Nagaraj 3 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?