சபரிமலை: ஆனி மாத பூஜையை முன்னிட்டு சபரிமலை அய்யப்பன் கோவில் நடை ஜூன் 14-ம் தேதி மாலை திறக்கப்படுகிறது என்று திருவிதாங்கூர் தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
ஆனி மாத சிறப்பு பூஜைகளை முன்னிட்டு சபரிமலை அய்யப்பன் கோவில் நடை ஜூன் 14-ம் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது.
தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி பிரசாத் நம்பூதிரி நடை திறந்து வைக்கிறார்.
ஜூன் 15 முதல் 19 வரை ஐந்து நாட்கள் சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளன. நெய்யாபிஷேகம், களபாபிஷேகம், கலசாபிஷேகம், சகஸ்ரகலச பூஜை, புஷ்பாபிஷேகம் மற்றும் படி பூஜை உள்ளிட்ட வழிபாடுகள் நடைபெறும்.
பக்தர்களுக்கான ஆன்லைன் முன்பதிவும் நடைபெற்று வருவதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.