புதுடெல்லி: அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட இந்தியர்களுக்கு கை விலங்கிட்டு அழைத்து வரப்பட்ட சம்பவத்திற்குஅமெரிக்காவை பிரதமர் மோடி கண்டிக்க மாட்டார் என்று ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தெரிவித்துள்ளார்.
சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் குடியேறிய இந்தியர்களை அந்நாட்டு அரசு கையில் விலங்கிட்டு நாடு கடத்தி இந்தியாவுக்கு கொண்டு வந்துள்ளது. இதை பிரதமர் மோடி கண்டிக்க மாட்டார் என்று ஓய்வு பெற்ற நீதி அரசர் சந்துரு கூறியுள்ளார்.
மேலும் அவர், “இந்திய அரசே குடிமக்களை அப்படித்தான் நடத்துகிறது. காவல்துறை நினைத்தால் யாருக்கும் கை விலங்கு பூட்ட முடியும். பிறகு மோடி எப்படி கண்டிப்பார்” என்று கூறியுள்ளார்.