ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் சீதாலட்சுமி டெபாசிட் கூட பெறாமல் தோல்வியை சந்தித்துள்ளார். 25,777 வாக்குகள் தேவைப்பட்ட நிலையில், நாதக வேட்பாளருக்கு 23,810 வாக்குகள் மட்டுமே கிடைத்துள்ளது. இதனால் இந்த இடைத்தேர்தலில் நாதக கட்சி படுதோல்வியை சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது.
திமுக வேட்பாளர் விசி சந்திரகுமாரின் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது. பிப். 5ஆம் தேதி நடந்த வாக்குப்பதிவில் 50 சதவிகிதத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்று அவர் வெற்றிபெற்றுள்ளார். இதனை திமுக தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
இந்த இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி டெபாசிட் வாங்குமா என்ற கேள்வி எழுந்தது. தேர்தலுக்குப் பின், ஒவ்வொரு வேட்பாளரும் தங்களது வேட்பு மனுவை தாக்கல் செய்யும் போது, தொகுதி பரிசுப்பதிவு தொகையாக ரூ.10 ஆயிரம் செலுத்த வேண்டும். தேர்தலுக்கு பின் அந்த தொகை திரும்ப வழங்கப்படும், ஆனால் அதன் அடிப்படையில், வேட்பாளர் தேர்தலில் 6 சதவீத வாக்குகளைக் கொண்டிருக்க வேண்டும்.
இதனை முன் வைத்தே, நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் சீதாலட்சுமி, டெபாசிட் தொகையை பெற்றுக் கொள்வாரா என்ற கேள்வி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. அதிமுக, பாமக, பாஜக உள்ளிட்ட முக்கிய கட்சிகள் இடைத்தேர்தலை புறக்கணித்த நிலையில், நாதக கட்சி தான் மட்டும் திமுகவுக்கு எதிராக வேட்பாளரை களமிறக்கியது.
இத்தனை கட்சிகள் போட்டியிடாமல் இருக்கும்போது, நாதக வேட்பாளர் டெபாசிட் தொகை வாங்கவில்லை என்றால், அதுவே மிகப்பெரிய விமர்சனங்களை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இப்போது நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் சீதாலட்சுமி 23,810 வாக்குகளை பெற்று தோல்வி அடைந்துள்ளார்.
இந்த இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி, டெபாசிட் வாங்குவதற்கு 25,777 வாக்குகளைப் பெறவேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனால், நாதக 1,967 வாக்குகள் வித்தியாசத்தில் டெபாசிட் தொகையையும் இழந்து தோல்வி அடைந்துள்ளது.
இந்நிலையில், நாம் தமிழர் கட்சி டெபாசிட் வாங்கி இருந்தால், அது கட்சிக்கான கவுரவமான தோல்வியாக அமைந்திருக்கும். நாடாளுமன்றத் தேர்தல்களில் எந்த தொகுதியில் வெற்றிபெறாவிட்டாலும், 8 சதவிகித வாக்குகளைப் பெற்றுள்ள மாநிலக் கட்சி, அந்தஸ்தை கொண்டுள்ளது. இதன் அடிப்படையில், இந்த இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு டெபாசிட் வாங்கும் ஒரு வாய்ப்பு இருந்தது. ஆனால் தற்போது நாதக டெபாசிட் கூட பெறாமல் தோல்வி அடைந்துள்ளது.