சென்னை : நிவேதா தாமஸ் நடித்துள்ள ’35 சின்ன விஷயம் இல்ல’ திரைப்படம் ஓடிடியில் வெளியிடப்பட்டுள்ளது.
நந்தா கிஷோர் எமானி இயக்கத்தில், நிவேதா தாமஸ் நடித்த ’35 சின்ன விஷயம் இல்ல’ திரைப்படம் 2024ம் ஆண்டு டிசம்பர் 25ம் தேதி வெளியானது. இப்படத்திற்கு விவேக் சாகர் இசையமைத்துள்ளார்.
இந்தப் படம் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த கதைக்களம் கொண்டதால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் இந்தப் படம் தற்போது ‘SUN NXT’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.