வாடிகன்: சட்டவிரோத குடியேறிகளை நாடு கடத்தும் டிரம்ப் நிர்வாகத்திற்கு கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் ஆண்டவர் பிரான்சிஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் எல்லை வழியே, அண்டை நாடுகளான மெக்சிகோ, கனடா உள்பட பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் சட்டவிரோத வகையில் புலம்பெயர்ந்து அந்நாட்டுக்குள் செல்கின்றனர்.
இந்நிலையில், இதுபோன்ற சட்டவிரோத குடியேறிகளுக்கு எதிராக, டிரம்ப் தலைமையிலான புதிய அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில், சட்டவிரோத குடியேறிகளை நாடு கடத்தும் டிரம்ப் நிர்வாகத்திற்கு கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் ஆண்டவர் பிரான்சிஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.