புதுடெல்லி: ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் பணிகளுக்கான யுபிஎஸ்சி சிவில் சர்வீசஸ் தேர்வு மற்றும் ஐஎஃப்எஸ் தேர்வுக்கான அறிவிப்பு கடந்த ஜனவரி மாத இறுதியில் வெளியிடப்பட்டது. இதற்கான விண்ணப்ப பதிவு கடந்த 11-ம் தேதி முடிவடைய இருந்த நிலையில், 18-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தொழில்நுட்பக் கோளாறுகள் குறித்து தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் புகார் அளித்ததைத் தொடர்ந்து, யுபிஎஸ்சி ஆன்லைன் விண்ணப்ப நடைமுறையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக நேற்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, சில தகவல்கள் பதிவு செய்தவுடன் திருத்தக்கூடியதாக மாற்றப்பட்டுள்ளது. மொபைல் எண்ணை மாற்றும் வசதியும் செய்யப்பட்டுள்ளது.