தேவையான பொருட்கள்:
பாலக்கீரை – 1 கட்டு
பெரிய வெங்காயம் – 3 (நறுக்கியது)
பூண்டு – 30 பல் (தோலுரித்தது)
மிளகாய் தூள் – 2 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
கடுகு – 1 டீஸ்பூன்
வெந்தயம் – 1/2 டீஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
வரமிளகாய் – 2
பூண்டு – 5 பல் (தட்டியது)
உப்பு – சுவைக்கேற்ப
கறிவேப்பிலை . சிறிது
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
சீரகத் தூள் – 1 1/2 டீஸ்பூன்
மல்லித் தூள் – 1 டீஸ்பூன்
செய்முறை:
பாலக்கீரையை நீரில் கழுவிவிட்டு, அதை பொடியாக நறுக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் மிக்சர் ஜாரில் வெங்காயம், பூண்டு, மிளகாய் தூள் சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும். பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு சேர்த்து தாளிக்க வேண்டும்.
அதன் பின் அதில் வெந்தயம், சீரகம், வரமிளகாய் சேர்த்து தாளிக்க வேண்டும். பின் அதில் தட்டி வைத்துள்ள பூண்டு பற்களை சேர்த்து நன்கு வதக்க வேண்டும். அடுத்து அதில் அரைத்து வைத்துள்ள விழுதை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு தூவி சிறிது நீரை ஊற்றி நன்கு கிளறி 2 நிமிடம் வேக வைக்க வேண்டும். பிறகு அதில் கறிவேப்பிலை, மஞ்சள் தூள், மல்லித் தூள், சீரகத் தூள் சேர்த்து கிளறி மிதமான தீயில் வைத்து, மூடி வைத்து பச்சை வாசனை போய் எண்ணெய் பிரியும் வரை வேக வைக்க வேண்டும். முக்கியமாக அவ்வப்போது கிளறி விட வேண்டும்.
இறுதியாக அதில் நறுக்கி வைத்துள்ள கீரையை சேர்த்து நன்கு கிளறி, குறைவான தீயில் வைத்து, 5 நிமிடம் நன்கு வேக வைக்க வேண்டும். கீரையின் நிறம் மாறியதும், அடுப்பை அணைத்துவிட்டால், சுவையான பாலக் கீரை தொக்கு தயார்.