வேலூர்: முதல்வர் ஸ்டாலினுக்கு வெள்ளைக் குடை வேந்தர் என்று பெயர் சூட்டினால் பொருத்தமாக இருக்கும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார்.
“வெள்ளைக் குடை வேந்தர்” என CM ஸ்டாலினுக்கு பெயர் சூட்டினால் பொருத்தமாக இருக்கும் என்று இபிஎஸ் விமர்சித்துள்ளார். வேலூர் கூட்டத்தில் பேசிய அவர், “திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது GoBackModi என கருப்பு பலூன் இருந்தது. ஆளும் கட்சியானதும் ஊழல் குற்றச்சாட்டுகளால், WelcomeModi என்று வெள்ளைக் குடை வந்துவிட்டது என்றார்.
மேலும், நீட் ரத்து ரகசியத்தை உதயநிதியால் இதுவரை கண்டறிய முடியவில்லை எனவும் சாடினார்.