சென்னை: யூபிஎஸ்சி தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
UPSC முதல்நிலைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க பிப்ரவரி 21 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும், பிப்ரவரி 22 முதல் 28 வரை, விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ளலாம்.
இத்தகவலை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது. ஆகஸ்ட் 22ஆம் தேதி முதல் 5 நாட்களுக்கு தேர்வு நடைபெறவுள்ளது. மேலும் விவரங்களுக்கு upsc.gov.in என்ற இணையதளத்தை அணுகவும்.