மகாராஷ்டிரா மாநிலத்தில் பறவைக் காய்ச்சலால் வனவிலங்குகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் கடந்த சில நாட்களாக பறவைக் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்த நோய் அண்டை மாநிலங்களுக்கும் பரவி வருகிறது.
மேலும் பரவாமல் தடுக்க கர்நாடக சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில் பறவை காய்ச்சல் எதிரொலியாக ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா மாநிலங்களில் இருந்து கோழி மற்றும் முட்டை வாங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பறவைக் காய்ச்சல் மேலும் பரவாமல் தடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.