புதுடெல்லி: தேசிய கல்விக் கொள்கை வகுத்துள்ளதற்கு என்ன காரணம் என்று தெரியுங்களா என மத்திய அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.
இந்தியாவை ‘வளர்ந்த இந்தியா’வாக மாற்ற பிரதமர் மோடி, தேசியக் கல்வி கொள்கையை (NEP) வகுத்துள்ளதாக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். 2047க்குள் அந்த நிலையை அடைய வேண்டும் என்றால், நாடு முழுவதும் NEPஐ வெற்றிகரமாக செயல்படுத்த வேண்டும்.
இதனால் மட்டுமே அது சாத்தியமாகும் எனவும் அவர் கூறியுள்ளார். NEPஐ ஏற்றால் தான் தமிழ்நாட்டிற்கு நிதி என இவர் கூறிய பின்னர் தான், இங்கு அரசியல் வட்டாரங்களில் பெரும் சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.