தஞ்சாவூர்: கும்பகோணம் வலையப்பேட்டை மாங்குடி பைபாஸில் விடுதலை சிறுத்தைகள் கட்சி கொடிமரம் சேதப்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசாரிடம் வாக்குவாதத்தில் விசிக மாவட்ட செயலாளர் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் சட்டமன்ற தொகுதியில் உள்ள வலையப்பேட்டை மாங்குடி பைபாஸில் விசிக கொடி மரத்தை நேற்று மர்ம நபர்கள் சேதப்படுத்தினர்.
அதனைக் கண்டித்து விசிக தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் க.செ.முல்லை வளவன் கொடி மரத்தை சேதப்படுத்திய குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டுமென்று காவல்துறையிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.