மதுரை: மதுரை மாவட்டம் ஆண்டார் கொட்டாரம் பகுதியில் உள்ள கடவு காத்த அய்யனார் கோவிலில் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் வழிபாடு நடத்த விடாமல் தடுப்பவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கலாம் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. அனைத்து தரப்பு மக்களும் குலதெய்வ தரிசனம் செய்ய எந்த தடையும் விதிக்கக்கூடாது.
கோவிலில் தெய்வ தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டால் உடனடியாக காவல்துறையை அணுக வேண்டும். உரிய பாதுகாப்புடன் குலதெய்வத்தை தரிசனம் செய்ய போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் விவேகா சுரேஷ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.