சென்னை : அதிமுக பூத் கமிட்டிகளை விரைவுப்படுத்துங்க என்று கட்சி நிர்வாகிகளுக்கு எடப்பாடி பழனிச்சாமி அறிவுறுத்தியுள்ளார்.
அதிமுக பூத் கமிட்டி அமைக்கும் பணிகளை விரைவுப்படுத்த நிர்வாகிகளுக்கு இபிஎஸ் அறிவுறுத்தியுள்ளார்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் இபிஎஸ் தலைமையில் இன்று மாலை மாவட்டப் பொறுப்பாளர்கள் கூட்டம் நடந்தது. இதில், அதிமுக விளையாட்டு அணியில் இளம் தலைமுறை வீரர்களை சேர்க்க அறிவுறுத்திய அவர், கட்சி வளர்ச்சிப் பணிகளை துரிதப்படுத்துவது உள்ளிட்டவை குறித்தும் ஆலோசித்துள்ளார்..