இஸ்லாமாபாத்: சாம்பியன் டிராபி கிரிக்கெட் தொடரில் ஏற்பட்ட படுதோல்வியால் பாகிஸ்தான் அணியின் இடைக்கால பயிற்சியாளர் ஆகிப் ஜாவித்தை நீக்க அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் முடிவு (PCB) செய்துள்ளது.
சாம்பியன் டிராபி தொடரில் நியூசிலாந்து மற்றும் இந்திய அணியிடம் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தோல்வி அடைந்தது.
இதனால் அந்த அணியின் அரையிறுதி வாய்ப்பு மங்கியுள்ளது. இதனால் அதிருப்தியான பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இடைக்கால தலைமை பயிற்சியாளர் மற்றும் துணை பயிற்சியாளரை விடுவிக்க முடிவு செய்துள்ளது.
- இது அந்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.