பெங்களூரு ஸ்ரீரா கண்டிரவா ஸ்டேடியத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கும் ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் பெங்களூரு எப்சி மற்றும் சென்னையின் எப்சி அணிகள் மோதுகின்றன. பெங்களூரு எஃப்சி அணி 21 ஆட்டங்களில் 10 வெற்றி, 4 டிரா, 7 தோல்வியுடன் 34 புள்ளிகளுடன் பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது. சென்னையின் எப்சி அணி 21 ஆட்டங்களில் 6 வெற்றி, 6 டிரா, 9 தோல்வியுடன் 24 புள்ளிகளுடன் 8-வது இடத்தில் உள்ளது. 6-வது இடத்தில் உள்ள மும்பை சிட்டி எப்சிக்கும் (32 புள்ளிகள்) சென்னையின் எப்சி அணிக்கும் 8 புள்ளி வித்தியாசம் உள்ளது.
இந்த போட்டியில் பெங்களூரு எஃப்சி வெற்றி பெற்றால் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவது உறுதி. மறுபுறம், சென்னையின் எப்சி வெற்றி பெற்றால், மீதமுள்ள இரண்டு போட்டிகளிலும் அந்த அணி வெற்றி பெற வேண்டும். மேலும் மற்ற அணிகளின் முடிவுகளும் சென்னையின் எஃப்சிக்கு சாதகமாக இருக்க வேண்டும். இது நடந்தால் சென்னையின் எப்சி அடுத்த சுற்றுக்கு தகுதி பெற வாய்ப்புள்ளது. ஐஎஸ்எல் தொடரில் இரு அணிகளும் 16 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் பெங்களூரு எஃப்சி 9 ஆட்டங்களிலும், சென்னை எப்சி 4 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. 3 போட்டிகள் டிராவில் முடிந்துள்ளன.