திண்டுக்கல்: இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ், தமிழகத்தில் ஒரு கோடியே 9 லட்சம் பேருக்கு வேலை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 2024-25-ம் ஆண்டில் 20 கோடி மனித ஆற்றல் நாட்கள் வேலை செய்ய மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ள நிலையில், இதுவரை 28.45 கோடி மனித ஆற்றல் நாட்கள் வழங்கப்பட்டுள்ளன. இத்திட்டத்திற்கான நிதியை மத்திய அரசு சமீப காலமாக வழங்காமல் காலதாமதம் செய்து வருவதால், திட்ட ஊழியர்களுக்கு உரிய நேரத்தில் சம்பளம் வழங்குவதில் தாமதம் ஏற்படுகிறது.
தற்போது இத்திட்டத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு சம்பள பாக்கி ரூ. 2,400 கோடி மற்றும் இத்திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் பல்வேறு உள்கட்டமைப்பு வசதிகளுக்கான பொருள் நிலுவைத் தொகை ரூ. 852 கோடியாகவும் உள்ளது. நிலுவையில் உள்ள திட்ட நிதியை விடுவிக்கக் கோரி பிரதமருக்கு தமிழக முதல்வர் கடிதம் எழுதியுள்ளார். தமிழக நிதியமைச்சரும் மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சரை நேரில் சந்தித்து நிலுவையில் உள்ள நிதியை விரைவில் விடுவிக்க கோரிக்கை விடுத்துள்ளார். நிதி கிடைத்ததும், ஊழியர்களுக்கு நிலுவையில் உள்ள சம்பளம், அவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும்,” என்றார்.