புது டெல்லி: சீனாவை சேர்ந்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை கொண்ட நிறுவனம் தயாரித்த டீப்சீக் செயலி இந்திய பயனாளர்களுக்கு தீங்கு விளைவிக்கும் என்பதால் அதனை இந் தியாவில் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று மனுதாரர் தரப்பில் டெல்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தேவேந்திர குமார் உபாத் யாயா அமர்வில் நேற்று முறையிடப்பட்டது.
இதையடுத்து நீதிபதிகள் உத்தரவில், “டீப்சீக் செயலி பயனாளர்களுக்கு ஆபத்தை தரக்கூடும் என்றால் அதனை பயன்ப டுத்துவதை தவிர்க்க வேண்டியது தானே? என மனுதாரருக்கு கேள்வியெழுப்பிய நீதிபதிகள், அவசர வழக்காக விசாரிக்க மறுத்துவிட்டனர்.