சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ள டிக்கெட் விற்பனை கவுன்டர்களில் 20 பேர் மற்றும் அதற்கு மேற்பட்ட நபர்களுக்கு பேப்பர் டிக்கெட்டாக வழங்கப்பட்டு வந்த குழு டிக்கெட்டுகளை 10% தள்ளுபடியுடன் பெறும் வசதி 1.3.2025 முதல் திரும்பப் பெறப்படுவதாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் பயணிகளுக்கு தெரிவித்துள்ளது.
டிஜிட்டல் டிக்கெட்டுகளுக்கு மாறுவதற்கு வசதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், சென்னை மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் மொபைல் செயலி மூலம் பயணிகள் அதே குழு டிக்கெட்டை 20% தள்ளுபடியுடன் பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.