அமெரிக்கா: அமெரிக்காவில் 533 மில்லியன் டாலர் பணத்தை கையாடல் செய்ததாக பைஜூஸ் ரவீந்திரன் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர் அமெரிக்கா குற்றவாளி ஆகியுள்ளார்.
இந்திய தொழில் முனைவரான பைஜூஸ் ரவீந்திரனை அமெரிக்க நீதிமன்றம் குற்றவாளி என்று அறிவித்துள்ளது.
அவர் தலைமையிலான பைஜூஸ் நிறுவனம், அமெரிக்காவில் 533 மில்லியன் டாலர் பணத்தை கையாடல் செய்ததாக குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது. அவருடன் கேம்ஷாப்ட் என்ற நிதி நிறுவனமும் மோசடியில் ஈடுபட்டதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த பரிவர்த்தனைகளை ரவீந்திரன் மறைக்க முயற்சித்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.