சென்னை: லோக்சபா தொகுதி மறுசீரமைப்பு மசோதா குறித்து விவாதிக்க, தமிழக அரசு நாளை அனைத்து கட்சி கூட்டத்தை நடத்துகிறது. இதற்காக 45 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பதிவு செய்யப்பட்ட தேசிய மக்கள் சக்தி கட்சிக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்றும், அதனால், அக்கட்சியின் தலைவர் வழக்கறிஞர் எம்.எல். ரவி இந்த கூட்டத்திற்கு தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
இதில், தமிழகத்தில் மொத்தம் 183 அரசியல் கட்சிகள் உள்ளன. தமிழக அரசு வசதிக்காக 45 அரசியல் கட்சிகளை மட்டும் அழைப்பது சரியல்ல. எனவே, எங்கள் கட்சியையும் அழைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ். ராமன் ஆஜராகி, அனைத்து பதிவு செய்யப்பட்ட கட்சிகளும் கூட்டத்தில் பங்கேற்கலாம் என்றார்.
அரசு பொதுச் செயலாளரிடம் மனுதாரர் கோரிக்கை விடுத்துள்ளதாகவும், அது பரிசீலிக்கப்படும் என்றும் அவர் கூறினார். அப்போது, பதிவு செய்யப்பட்ட கட்சி என்ற அடிப்படையில் மனுதாரர் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றும், அவரது கட்சியை கூட்டத்துக்கு அழைப்பது குறித்து அரசு பரிசீலிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.