புதுடில்லி: அதிகரித்து கொண்டே வருகிறது… வெளிநாடுகளில் செட்டில் ஆன இந்தியர்கள் தங்களது இந்திய பாஸ்போர்ட்டை ஒப்படைக்கும் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது.
அமெரிக்கா, கனடா, பிரிட்டன், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் செட்டில் ஆனவர்கள் அதிக அளவில் பாஸ்போர்ட்டை ஒப்படைத்து வருவதாகக் கூறப்படுகிறது.
30 முதல் 45 வயது வரை உள்ளவர்கள், அந்த நாடுகளில் உள்ள வேலை மற்றும் வாழ்க்கைச் சூழல், உள்கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்டவற்றால் கவரப்பட்டு, இந்தியக் குடியுரிமையை அவர்கள் விட்டுக்கொடுப்பதாகக் கூறப்படுகிறது.
நாட்டிலேயே, டெல்லியைச் சேர்ந்தவர்கள்தான் பாஸ்போர்ட்டை ஒப்படைப்பதில் முதலிடத்தில் உள்ளனர். 2014-ஆம் ஆண்டு முதல் 2022-ஆம் ஆண்டு வரை 60 ஆயிரத்து 414 பேர் தங்களது பாஸ்போர்ட்டை ஒப்படைத்துள்ளனர். டெல்லிக்கு அடுத்து பஞ்சாப், குஜராத் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் உள்ளனர்.