போர்க்களத்தில் அமைதியை எதிர்பார்க்க முடியாது என்று வியன்னாவில், ரஷ்யாவில் குறிப்பிட்டு பேசிய பிரதமர் மோடி, ஆஸ்திரியாவில் இதை மீண்டும் வலியுறுத்தினார். இது போருக்கான நேரம் அல்ல என்றார்.
கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் போர் இரண்டு ஆண்டுகளாக நடந்து வருகிறது. இந்நிலையில், மேற்கு ஆசிய நாடான இஸ்ரேலுக்கும், ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கும் இடையே போர் நடந்து வருகிறது.
கூட்டு அறிக்கை
இந்த இரண்டு விஷயங்களிலும் இந்தியா நடுநிலை வகிக்கிறது. பேச்சு மூலமே தீர்வு காண முடியும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்ற பிறகு, பிரதமர் மோடி அதிகாரப்பூர்வ பயணமாக ரஷ்யா மற்றும் ஆஸ்திரியா சென்றுள்ளார். இரண்டு நாட்கள் ரஷ்யாவில் இருந்த அவர் அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புதினை சந்தித்து பேசினார். போர்க்களத்தில் அமைதியை எதிர்பார்க்க முடியாது; பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே அமைதியை அடைய முடியும் என்று அவர் புதினிடம் கூறினார்.
அந்த பயணத்தை முடித்துக் கொண்டு நேற்று இரவு மத்திய ஐரோப்பிய நாடான ஆஸ்திரியா சென்றடைந்தார் பிரதமர் மோடி. 41 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியப் பிரதமர் ஒருவர் அந்த நாட்டுக்கு விஜயம் செய்துள்ளார். இதையடுத்து மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
நேற்று இரவு ஆஸ்திரிய பிரதமர் கார்ல் நெஹ்மர் அவரை சந்தித்தார். பிரதமர் மோடி கார்ல் நெஹ்மரை கட்டிப்பிடித்து வாழ்த்து தெரிவித்தார். மேலும், இருவரும் செல்ஃபியும் எடுத்துக் கொண்டனர். இந்த புகைப்படங்களை இரு நாட்டு பிரதமர்களும் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர். இதையடுத்து நேற்று இரு தலைவர்களும் சந்தித்து ஆலோசனை நடத்தினர். இதைத் தொடர்ந்து கூட்டறிக்கை வெளியிடப்பட்டது.
இந்த சந்திப்பு குறித்து பிரதமர் மோடி கூறியதாவது:
நாங்கள் இருவரும் உக்ரைன் போர் பற்றி நீண்ட நேரம் பேசினோம். இது போருக்கான நேரமில்லை. போராட்ட களத்தில் தீர்வு காண முடியாது. அப்பாவி மக்கள் கொல்லப்படுவதை எங்கும் ஏற்றுக்கொள்ள முடியாது. எந்த ஒரு பிரச்சனையையும் பேச்சின் மூலம் தீர்க்க முடியும். உக்ரைனில் அமைதியை ஏற்படுத்த நாங்கள் இருவரும் தயாராக இருக்கிறோம். இந்தியா-ஆஸ்திரியா தூதரக உறவுகளின் 75வது ஆண்டில் நாங்கள் இருக்கிறோம். இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இந்த விஜயம் அமைந்துள்ளது.
பல்வேறு பிரச்னைகள் குறித்து பேசினோம். பயங்கரவாதம் எந்த வடிவத்திலும் அனுமதிக்கப்படாது என்பதில் நாங்கள் ஒருமனதாக இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.