பெங்களூரு: கர்நாடக சட்டசபையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. கர்நாடக சட்டசபையில் 2025-26-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை முதல்வரும், நிதியமைச்சருமான சித்தராமையா தாக்கல் செய்தார். பட்ஜெட்டை தாக்கல் செய்து அறிவிப்பை வெளியிட்ட சித்தராமையா இதற்கான அறிவிப்பை வெளியிட்டார். கல்வி மற்றும் பொருளாதாரத்தில் மன்மோகன் சிங்கின் பங்களிப்பு அளப்பரியது.

எனவே, பெங்களூரு பல்கலைக்கழகத்துக்கு அவரது பெயரை சூட்ட முடிவு செய்துள்ளோம் என்றார். மன்மோகன் சிங் வயது மூப்பு காரணமாக கடந்த ஆண்டு டிசம்பர் 26-ம் தேதி காலமானார். கல்வி மற்றும் பொருளாதாரத்தில் அவரது பங்களிப்புகள் பரவலாக அங்கீகரிக்கப்பட்டன. பல்கலைக்கழகத்துக்கு அவரது பெயரை சூட்டுவது கர்நாடகா தனக்கு அளிக்கும் மரியாதையாகக் கருதப்படுகிறது என்றார்.
மேலும், அரசு கலைக் கல்லூரி மற்றும் அரசு ஆர்.சி கல்லூரி ஆகியவை பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்படும். கர்நாடகாவில் உள்ள ஜைன, பௌத்த, சீக்கிய மற்றும் கிறிஸ்தவ சமூகங்களின் மேம்பாட்டுக்காக கர்நாடக பட்ஜெட்டில் 350 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் வக்ஃபுக்கு சொந்தமான நிலத்தில் பெண்களுக்கான 15 கலைக் கல்லூரிகள் அமைக்கப்படும் என்றார்.