சென்னை: இளையராஜாவால் இந்தியாவிற்கே பெருமை என்று நடிகர் ரஜினிகாந்த் புகழாரம் சூட்டியுள்ளார்.
திரைத்துறையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ள இசைஞானி இளையராஜா, அடுத்ததாக முதன்முறையாக நேரடியாக சிம்பொனி இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்தவுள்ளார்.
இன்று, லண்டனில் உள்ள அப்பல்லோ அரங்கத்தில் இந்த சிம்பொனி இசை நிகழ்ச்சி பிரம்மாண்டமான முறையில் நடைபெறவுள்ளது. இதற்காக இளையராஜாவை சந்தித்து அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.
இந்த நிலையில், சிம்பொனி இசை நிகழ்ச்சியை நடத்த உள்ள இசைஞானி இளையராஜாவுக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
பண்ணைபுரத்தில் ஹார்மோனியம் வாசித்த கைகள், இன்று லண்டனில் சிம்பொனி படைக்கிறது. சாமி, உங்களால் இந்தியாவிற்கே பெருமை! பாராட்டுகள் என்று கூறியுள்ளார்.