மேஷம்: நல்லவர்களை சந்திப்பீர்கள். எல்லா பிரச்சனைகளையும் எதிர்கொள்ளும் மனோபலம் உங்களுக்கு இருக்கும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் உண்டாகும். தொழிலில் லாபம் காண்பீர்கள்.
ரிஷபம்: பொதுக் காரியங்களில் நம்பிக்கையுடன் ஈடுபடுவீர்கள். பிள்ளைகளின் விருப்பங்களைக் கேட்டு நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் பிரபலங்களை சந்திப்பீர்கள். அலுவலகத்தில் வாக்குவாதங்களை தவிர்ப்பீர்கள்.
மிதுனம்: சொந்த பந்தங்களால் அன்பு தொல்லை உருவாகும். உங்களைச் சுற்றியுள்ளவர்களில் யார் நல்லவர் என்பதை நீங்கள் புரிந்துகொள்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் காண்பீர்கள்.
கடகம்: குடும்பத்துடன் சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்பீர்கள். உறவினர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். வியாபாரத்தில் பழைய பொருட்கள் விற்கப்படும். தொழில் வெற்றிகரமாக அமையும்.

சிம்மம்: மன உளைச்சல்கள் விலகும். உங்கள் கனவுகள் நனவாகும். அறிஞர்களின் நட்பால் ஞானம் அடைவீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். வியாபாரம் செழிக்கும். அலுவலகத்தில் அமைதி காக்கவும்.
கன்னி: தம்பதிகளிடையே நெருக்கம் அதிகரிக்கும். உங்கள் குழந்தைகளை பொறுப்புடன் வளர்க்க வேண்டும் என்று நினைப்பீர்கள். அலுவலகத்தில் திட்டமிட்ட பணிகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். தொழிலை விரிவுபடுத்துவீர்கள்.
துலாம்: எதிர்பாராத இடத்திலிருந்து பணம் வரும். மனதில் புதிய யோசனைகள் வரும். உடன்பிறந்தவர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். மனைவி மூலம் லாபம் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் காண்பீர்கள்.
விருச்சிகம்: எதிர்காலத்திற்கான முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். அற்புதமாகப் பேசி அனைவரையும் கவர்வீர்கள். வியாபாரத்தில் சுபிட்சம் உண்டாகும். அலுவலகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். உங்கள் மேலதிகாரி அதைப் பாராட்டுவார்.
தனுசு: பிறருக்கு நியாயம் பேசி உங்கள் நற்பெயரை கெடுக்காதீர்கள். அலுவலகத்தில் சக ஊழியர்களை விமர்சிக்க வேண்டாம். தொழிலில் செழிப்பைக் காண்பீர்கள். பண விஷயத்தில் கண்டிப்பாக இருப்பது நல்லது.
மகரம்: குடும்பத்தில் ஆரோக்கியமான விவாதங்கள் வந்து சேரும். உங்கள் வாகனத்தை பழுது பார்ப்பீர்கள். பழைய உறவினர்கள் உங்களைத் தேடி வருவார்கள். அலுவலகத்தில் பணிச்சுமை குறையும். வியாபாரத்தில் புதிய முதலீடுகளைச் செய்வீர்கள்.
கும்பம்: சின்ன சின்ன வாய்ப்புகளை பயன்படுத்தி புதிய திட்டங்களை தீட்டுவீர்கள். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். அலுவலகத்தில் புதிய பதவி கிடைக்கப் பெறுவீர்கள். வியாபாரத்தில் பழைய பொருட்களை விற்று தீர்த்து வைப்பீர்கள்.
மீனம்: பிரச்சனைகளை தீர்க்கும் மனோபலம் பெறுவீர்கள். சகோதரர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். உத்தியோகபூர்வ பயணங்களால் புத்துணர்ச்சி பெறுவீர்கள். வியாபாரத்தில் புதிய யுக்திகளைக் கையாண்டு லாபம் அடைவீர்கள்.